
தோட்டதுக்கு நீர் இறைக்க 5040 வாட்ஸ் சோலார் பேனலை வாங்கினேன். இதற்கு 5.5 லட்சம் செலவானது. ஆனால் இந்த சோலார் பேனல், 25 வருடங்களுக்கும் மேல் உழைக்கும் என்பதால் இந்தச் செலவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதிலிருந்து 870 வோல்ட் டிசி மின்சாரம் அல்லது 415 வோல்ட் ஏசி மின்சாரம் கிடைக்கும். 3 பேஸிலும் கரண்ட் வரும். மின்னழுத்தம் சீராக இருக்கும். இதனால் மோட்டார் எரிந்து போய்விடும் என்று பயப்படத் தேவையில்லை.
இப்போது காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை எங்கள் தோட்டத்தில் நீர் இறைக்கும் மோட்டார் வேலை செய்கிறது. உச்சி வெயிலில் அதிகமாகத் தண்ணீர் வரும். நான் சொட்டு நீர்ப் பாசன முறையில் மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன். இப்போது கரண்ட் பில் கட்டத் தேவையில்லை. கரண்ட் கட் ஆகிவிடும் என்ற பயமுமில்லை; கவலையுமில்லை.
சோலார் பேனல் வாங்கினால் மத்திய அரசு 30 சதவிகிதம் மானியம் தருகிறது என்று கேள்விப்பட்டு "மினிஸ்ட்ரி ஆஃப் நியூ அன்ட் ரினிவபிள் எனர்ஜி' துறையை அணுகினேன். அவர்கள் "தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் அசோசியேஷன்' மூலமாகப் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். அவர்களிடம் கேட்டால், அவர்கள் குறிப்பிடும் சோலார் பேனல்களை வாங்கினால் மட்டும்தான் மானியம் என்றார்கள். நான் தொடர்ந்து முயற்சிக்கவில்லை.
மின்சாரப் பற்றாக்குறை அதிகமாக உள்ள இந்நாளில், சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைத் தயாரிப்பது மிகவும் நல்லது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாதது. ஆனால் சோலார் பேனல்களின் விலை அதிகமாக இருப்பதால் எல்லா விவசாயிகளும் வாங்கத் தயங்குவார்கள். விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரத்துக்கு மாற அரசு உதவி செய்ய வேண்டும்'' என்கிறார் ஆர்.விஜயகுமார்.
சூப்பர்டெக் சோலார் மின்சக்தி ,பெங்களூரு
ReplyDeleteமின்சாரம் இல்லையா? கவலை வேண்டாம் ..
தடையில்லா சோலார் மின்சாரம் !
யூ .பி.எஸ் பேட்டரி சார்ஜ் செய்ய மின்சாரம்
தேவையில்லை .
உங்கள் இடத்தில்
சோலார் மின்சக்தி வல்லுநர்களால் 100 % பொருத்த்தி தரப்படும் டி .வி. நிகழ்ச்சிகள் தடையில்லாமல் பார்க்க,
மிக்சி ,டேபிள் டாப் கிரைண்டர் ,
வாஷிங் மெஷின் ,கணினி ,லைட்டுகள் ,பேன் ,
தடையில்லாமல் இயங்க ,
நாகர் கோவில் ,திருநெல்வேலி,தூத்துக்குடி ,திருச்சி
டிஸ்ட்ரிபுடரை தொடர்பு கொள்ளவும்.
மிஸ்டர். ஷேய்க் நூர்தீன் -
9344152945, - பெங்களூரு- 09483510779
சோலார் மின்சக்தி வீடு, கடை, ஆபீஸின்
இன்றைய அவசிய தேவை
நேரடி சேவை !
மின்சாரம் இல்லை என்கிற கவலை இனி வேண்டாம்!
சோலார் மின்சக்தியை நிறுவி கவலையை விடுங்கள் .