
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.. ஆனால் நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டும் தான் பெற்றுள்ளோம், அரசியல் வாதிகள் இடமிருந்து இல்லை.. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு முறையில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
சமீபத்தில் விஜய் அவர்கள் நடித்த ஒரு தமிழ் படம், தமிழகத்தை தவிர அணைத்து மண்ணிலும் வெளியிடப்பட்டது. முகநூலில் அதை பற்றி நிறைய பதிவுகள் பார்த்திருந்தேன், ஆனால் மனதில் ஒன்றும் தோன்றவில்லை, ஆனால் தற்செயலாக நேற்று ஒரு காணொளி காண நேர்ந்தது, பொதுவாக அவரிடம் பணியாற்றும் அனைவரும் சொல்வது மிகவும் கலகலப்பான நடிகர் என்று தான், ஆனால் அந்த கானொளியில் அவர் எவ்வளவு வருத்ததுடன் பேசிருப்பர், வேறு ஒரு ரசிகனாய் இருந்தாலும் அதை கண்டு கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பான்.
படம் வெளிவராமல் இருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது யாவரும் அறிந்ததே, உங்கள் தனிப்பட்ட கோபத்தை அரசியலுக்கு வெளியே காட்டலாமே, நீங்கள் பத்தி ஏற்கும் பொழுது கீதையின் மீதும், இந்திய சட்டப் புத்தகத்தின் மேல் சத்தியம் செய்த படி கூறிய "என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை என் பதவியின் பலம் வைத்து தீர்க்கமட்டேன்", என்று சொன்னது எங்கே போனது.. அப்படி என்றால் கீதையின் மேலும், சட்டப் புத்தகத்தின் மேலும் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பு இதுதானா...
வேறு ஒரு சிலர் இதை கிண்டலடிப்பதை தான் கடந்த ஒரு வாரமாக தங்கள் வேலையாய் கொண்டுள்ளனர், ஒருவரின் வருத்தத்தை எப்படி தான் உங்களால் சந்தோசமாக மாற்ற முடிகிறதோ..அதே போன்று ஒரு தனி மனிதனுக்காக உயிர் விடுவதும் அற்பமான விஷயம், அவன் சற்று தான் குடும்பத்தையும் நினைத்து பார்த்திருக்க வேண்டும்..
சற்று நினைத்து பாருங்கள், ஒரு படம் வெளிவர, ஒரு தனிமனிதனாய் எவ்வளவு போராடுகிறார், உங்களை நான் துணை நிற்க சொல்லவில்லை, தடையை நிற்க்கதீர்கள் என்றே சொல்லுகிறேன். அவரின் வேலை ஒரு பொழுபோக்கு படத்திற்கு நடிப்பது மட்டுமே, அதற்க்கு அவர் சம்பளம் வாங்கி விட்டார், இப்படம் வெளிவந்தாலும் வெளிவராவிட்டாலும் அவருக்கு அதே சம்பளம் தான். அவர் நோக்கம் தன் நடிப்பு வீணாகிவிடக்கூடாதே என்பது மட்டும் தான்..
நேற்று கமல், இன்று விஜய்... இது கலைத்துறைக்கு மட்டுமல்ல.. வேறு துறைகளிலும் நடை பெறுகிறது, வெளியே தெரிவதில்லை, தனிப்பட்ட பிரச்சனைக்காக பிறரை அரசியலாக்கி பழிவாங்குவது பலரின் வேலை ஆகிவிட்டது, நம்மை அடிமையாய் ஆள நினைக்கும் அவர்கள் நமக்கே சொல்வது இந்த "சுதந்திர தின வாழ்த்து".
0 comments:
Post a Comment