Friday, July 19, 2013

சீனி அவரைக்காய் (எ) கொத்தவரங்காய்


என்ன சத்துக்கள்? நார்ச்சத்து, புரதச் சத்து, மற்றும் அமினோ அமிலங்கள் இதிலுள்ளது. பலன்கள் சர்க்கரை நோயை குணப்படுத்தும். கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும் அதனுடன் பூண்டு சேர்த்துக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் குறையும் என்கிறது ஒரு ஆராய்ச்சி. நார்ச்சத்துள்ள உணவுகள் கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன. நார்ச் சத்து உணவுப் பாதையை, குறிப்பாக பெருங்குடலையும் அதற்குக் கீழுள்ள உணவுப் பாதையையும் தடைகளில்லாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த நார்ச் சத்து உணவுப் பாதையில் நகரும் போது கூடவே கொலஸ்ட்ராலையும் கூட்டிக் கொண்டு போய் விடுகிறது. இதனால் உணவிலும், செரிமான திரவங்களிலும் இருக்கும் கொலஸ்ட்ரால் நமது ரத்தத்திற்கு போகாமல், மலத்திற்குப் போய் உடம்பிற்கு வெளியே போய் விடுகிறது.

0 comments:

Post a Comment